in

தளபதி விஜய் ஆசைப்பட்ட அந்த ஒரு ரோல்! அமைதிப்படை ரீ-ரிலீஸ்: -சத்யராஜ் சொன்ன சீக்ரெட் பேட்டி!

Watch – YouTube Click

‘ஓ மை கடவுளே’, இப்போ ரிலீஸாகப் போற ‘டிராகன்’னு தமிழ் சினிமாவோட செம ப்ராமிஸிங் இயக்குநரா வளர்ந்து நிக்கிறவர் தான் அஷ்வத் மாரிமுத்து.

அடுத்து நம்ம எஸ்டிஆர் (STR) வச்சு படம் பண்ணப்போற இவரு, சமீபத்துல கொடுத்த ஒரு பேட்டியில தளபதி விஜய் பத்தி ரொம்ப எமோஷனலா சில விஷயங்களைச் சொல்லிருக்காரு.

அஷ்வத் மாரிமுத்துவோட ‘டிராகன்’ படத்தோட சில காட்சிகளைப் பார்த்துட்டு, விஜய் சாரே இவரை நேர்ல கூப்பிட்டு வாழ்த்து சொல்லிருக்காரு.

கூட அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதன் எல்லாரும் இருந்துருக்காங்க. வழக்கமா படபடன்னு பேசுற அஷ்வத், விஜய் சார் முன்னாடி நின்னப்போ அப்படியே ‘ஸ்டாச்சு’ மாதிரி ஆகிட்டாராம்!

“நமக்கு அவ்ளோ பிடிச்ச ஒரு மனுஷன் கண்ணு முன்னாடி நிக்கும்போது எனக்குப் பேச்சே வரல. அவரைப் பார்த்த உடனே கண்ணுல தண்ணி தான் வந்துச்சு.

அமைதியா அவரை மட்டுமே பார்த்துட்டு இருந்தேன்”னு அந்தத் தருணத்தை ரொம்ப உருக்கமாச் சொல்லிருக்காரு.அஷ்வத்தோட மேக்கிங் ஸ்டைல் விஜய் சாருக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிருக்காம்.

உடனே அர்ச்சனா கல்பாத்தியைப் பார்த்து, “எப்படி இவனை மிஸ் பண்ணீங்க? ஏன் முன்னாடியே என்கிட்ட கூட்டிட்டு வரல?

விஜய் கேட்டுருக்காரு. இதைக்கேட்ட அஷ்வத்துக்குத் தன் கனவு ரொம்பப் பக்கத்துல வந்து மிஸ்ஸான மாதிரி ஒரு ஃபீல் கிடைச்சுருக்கு.

அஷ்வத் மாரிமுத்து, விஜய் சாருக்காகவே ஒரு ‘பெரிய கதை’ ஒன்னு ரெடி பண்ணி வச்சுருந்தாராம். “ரஜினி சார், கமல் சார் கூட வொர்க் பண்ணனும்ங்கிறது எப்படி ஒரு கனவோ, அதே மாதிரி விஜய் சாரை இயக்கணும்ங்கிறது என்னோட மிகப்பெரிய லட்சியம்.

ஆனா இப்போ அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குப் போயிட்டாருங்கிறது எனக்குப் பெரிய ஏமாற்றமா இருக்கு.

அவர்கிட்ட ‘சார் ஒரு கதை இருக்கு’ன்னு கூட என்னால சொல்ல முடியலையே”ன்னு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசியிருக்காரு. தளபதி ரசிகர்கள் மத்தியில இப்போ அஷ்வத்தோட இந்த வீடியோ செம வைரலா பரவிக்கிட்டு இருக்கு!

What do you think?

பார்த்திபனின் அதிரடி முடிவு! ‘No Caste, No Religion’சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! மன்னிப்பு வீடியோ!