in

பண்பாட்டு கழக தேர்தலில் வெற்றிவாகை சூடிய சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரன்

பண்பாட்டு கழக தேர்தலில் வெற்றிவாகை சூடிய சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரன்

 

பரமக்குடியில் தேவேந்திரர் பண்பாட்டு கழக தேர்தலில் வெற்றிவாகை சூடிய சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரன்

பணியை துவங்கும் முன் தாத்தாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பேரன் சக்கரவர்த்தி

சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனார் பஞ்சாபில் இந்திய ராணுவத்தில் வேலை செய்து விட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்.

இந்த நிலையில் இவரது பிறந்த நாளான அக்டோபர் 9ஆம் தேதி அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்து அங்கீகரித்தது ஒவ்வொரு ஆண்டும் இவரது நினைவு தினமான செப்டம்பர் 11ஆம் தேதி இவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாதி சமயங்களை கடந்து இவருக்கு புகழஞ்சலி செலுத்துவது மட்டுமின்றி பல்வேறு மாநில மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இவருக்கு பால்குடம் மற்றும் பாரியெடுத்து கடவுளாகவே பாவித்து அவரது நினைவிடத்தில் சமர்ப்பித்து வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் பரமக்குடி தேவேந்திர பண்பாட்டு கழகம் முன் நின்று நடத்தி வருவது வழக்கம் இந்த நிலையில் தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தேர்தல் ஆனது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிலையில் நேற்றைய தினம் நடந்து முடிந்த தேர்தலில் தேவேந்திர பண்பாட்டு கழக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சமூக நீதிப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் பேரன் சக்கரவர்த்தி அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெற்றார்.

இதனை அடுத்து தனது பணியை துவங்கும் முன் தனது தாத்தா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு பணியை துவங்க ஆரம்பித்தார்.

அப்போது செய்தியாளரை சந்தித்த அவர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அனைவராலும் உற்று நோக்கக் கூடிய பட்டியல் வெளியேற்ற போராட்டத்திற்கு தொடர்ந்து பாடுபடுவேன் தாத்தா விட்டுச் சென்ற பணியினை முன் நின்று செய்வேன் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

What do you think?

பிக்க் பாஸ் சீசன் 9 விரைவில் ….

நெய்வேலியில் கோடிக்கணக்கில் பேரம் பேசி இரிடியம் விற்பனை