in

அழகிய நம்பிராயா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக கால்நாட்டு வைபவம்

அழகிய நம்பிராயா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக கால்நாட்டு வைபவம்

 

திருக்குறுங்குடி சுவாமி அழகிய நம்பிராயா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக கால்நாட்டு வைபவம் திருக்குறுங்குடி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமாநுஜஜீயர் சுவாமிகள் ஆசீா்வாதத்துடன் நடைபெற்றது.

108 வைணவ திவ்யதேசங்களில் பாண்டிநாட்டுத் திருப்பதிகளில் ஒன்றான நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி சுவாமி அழகிய நம்பிராயா் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலுக்கு ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹாஸம்ப்ரோஷண திருப்பணி வேலைகள் திருக்குறுங்குடி ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமாநுஜஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

வருகின்ற 2026 மார்ச் 25ம் தேதி மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் மஸா ஸம்ரோஷணம் நடத்த ஸ்ரீஅழகியநம்பிராயர் விண்ணப்பம் செய்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரம்மாண்ட நிகழ்விற்காக கார்த்திகை 29ஆம் தேதி 15.12 .2025 திங்கட்கிழமை ஏகாதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுப தினத்தில் இன்று காலை மணி 6.03 – 7.30 குள் தனுர் லக்னத்தில் சுவாமி அழகிய நம்பியின் (மகா சம்ரோக்ஷண ஸ்தம்ப பிரதிஷ்டை) மஹாகும்பாபிஷேக நிகழ்வக்காக கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.

இதற்காக முதலில் திருஜீயா் மடத்தில் ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமாநுஜ ஜீயா் சுவாமிகளிடம் தேங்காய் பெற்று சுவாமி மழகிய நம்பியிடம் பிராத்தனை செய்யப்பட்டது.

தொடா்ந்து பெருமாள் பிரசாதங்களுடன் யானை முன்செல்ல பந்தக்காலுடன் திருக்கோயில் பிரகாரமாக யாகசாலை அமையும் இடம் வந்தனா். அங்கு புண்யாகவாசனம் செய்து மாலை அணிவித்து பந்தக்காலுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடா்ந்து நவதானியங்கள் பால சோ்பித்து வேதபாராயணம் முழங்க மங்கல இசையுடன் சுவாமி அழகிய நம்பிராயா் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்காக கால்நாட்டு வைபவம் நடைபெற்றது.

இன்றிலிருந்து திருக்கோவில் கோபுரங்களுக்கு வா்ணம் பூசுதல். கலசங்கள் அமைத்தல் உத்தமபட்ச யாகசாலை அமைத்தல் பத்திாிக்கை அடித்தல் போன்ற திருப்பணிகள் ஜீயா் சுவாமிகள் மேற்பாற்வையில் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருஜீயா் மடம் . சுவாமி அழகியநம்பிராயா் தேவஸ்தானம் மற்றும் டிவிஎஸ் குழுமத்தினா் செய்திருந்தனா்.

What do you think?

நெல்லையில் நாராயணீய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு