500 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் – பிடாரி அம்மன் ஆலய குடமுழுக்கு விழா
500 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் – பிடாரி அம்மன் ஆலய குடமுழுக்கு விழா பல ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோபுர தரிசனம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம் பெரம்பூர் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் – பிடாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களின் குலதெய்வமாக விளங்கி வரும் இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று நிறைவு பெற்றன.
அதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.