கூடலழகர் திருக்கோவிலில் நடைபெற்ற 1008 கலச திருமஞ்சனம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் திருக்கோவிலில் நடைபெற்ற 1008 கலச திருமஞ்சனம்- வருடாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்ட பக்தர்கள் – ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுரை வள்ளி தாயார் உபநட்சியாளர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த வியூக சுந்தர்ராஜ பெருமாள்.

தென் தமிழகத்தில் மிக முக்கிய ஒரு மாவட்டமாக இருந்து வரக்கூடிய மதுரை மாவட்டத்தில் வருடத்தில் 365 நாட்களும் திருவிழாக்கள் தான்.
ஒருபுறம் அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறக்கூடிய விசேஷங்கள் மறுபுறம் பெருமாள் ஆலயங்களில் ஒன்றான அழகர் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் நடைபெறக்கூடிய விசேஷங்கள் இப்படியாக எல்லாருமே திருவிழா கொண்டாட்டமாக இருந்து வருவதுதான் மதுரை
இந்நிலையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு கூடல் நகர் திருக்கோவிலில் இன்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு 1008 கலச திருமஞ்சனம் நடைபெற்றது.
குறிப்பாக வருடத்தில் மூன்று முறை மட்டுமே நான்கு தாயாருடன் வியூக சுந்தர்ராஜ பெருமாள் திருமஞ்சனம் கண்டு அருளுகிறார்.
குறிப்பாக தை மாதம் நடைபெறக்கூடிய இந்த வருஷம் அபிஷேக நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருமஞ்சனத்தின் போது காட்சியளித்த பெருமாளை மனம் உருக வணங்கினர்.
கோவில் வளாகத்தில் ஓம குண்டங்கள் ஏற்படுத்தப்பட்டு 18 கலசங்களில் உள்ள புனித நீர்கள் மீது மலர் வஸ்திரம் உள்ளிட்டவைகள் சாற்றப்பட்ட நிலையில் வேத மந்திரங்கள் முழங்க மேலதாளங்கள் முழங்க சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
காலை முதலாகவே நடைபெற்ற இந்த யாக பூஜைக்கு பிறகு பால், இளநீர், தண்ணீர், நெய், சந்தனம், விபூதி, இப்படியாக வாசனை திரவியங்கள் மற்றும் பழங்கள் கொண்டு வியூக சுந்தர்ராஜ பெருமாள் இதுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

கலச பூஜையின் போது வைக்கப்பட்ட கலசங்கள் அனைத்தும் தொடர்ந்து பெருமாளுக்கு திருமணத்தின் போது அவர் மீது ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு கலஷம் கோவில் பிரகாரத்தில் இருந்து புறப்பாடாகி முக்கிய இடங்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மதுரைவல்லி தாயார் ஸ்ரீதேவி பூமிதேவி ஆகியோருக்கும் திருமஞ்சனம் நடைபெற்ற பிறகு விசேஷ அலங்காரத்தில் அனைவரும் பக்தர்களுக்கு காட்சியளிக்க பக்தர்கள் கோவிந்தா என கோஷம் முழங்க மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கலச பூஜையானது நடைபெறுவது வழக்கம் இந்த கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வருட அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


