வசூலில் ‘தாய் கிழவி’ சரவெடி! அதிரடி காட்டும் ராதிகா! இந்த பாட்டி ‘சூப்பர் ஸ்டார்’ தான்!
தமிழ் சினிமாவுல இப்போ வித்யாசமான கதைகள் வர ஆரம்பிச்சிருக்கு. அந்த வரிசைல அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேஷன் இயக்கத்துல நம்ம ராதிகா மேடம் நடிப்பில் வெளியாகியிருக்கிற படம் தான் இந்த ‘தாய் கிழவி’.
ஊர்ல இருக்குற எல்லாருக்கும் வட்டிக்கு விட்டு, எல்லாரையும் மிரட்டி காசு வசூல் பண்ற ஒரு கெத்தான பாட்டி தான் இந்த பவுனுதாயி (ராதிகா).
“இந்த ஆத்தா எப்ப தான் சாகும்?”னு ஊரே காத்துட்டு இருக்கு. இவருக்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலினு மூணு மகன்களும், ஒரு மகளும் இருக்காங்க.
திடீர்னு ஒரு நாள் பாட்டிக்கு உடம்பு முடியாம போக, இன்னும் ரெண்டு நாள்ல செத்துடுவாங்கன்னு டாக்டர் சொல்லிடுறாரு.
அப்போதான் அந்த ட்விஸ்ட்.. பாட்டி கிட்ட 160 பவுன் நகை இருக்குற விஷயம் மகன்களுக்கு தெரியுது.
அந்த நகையை மத்தவங்களுக்கு தெரியாம எப்படி ஆட்டைய போடலாம்னு இவங்க போடுற பிளான் தான் இந்த ‘தாய் கிழவி’யோட அதிரடி கூத்து!
படுத்த படுக்கையா இருந்தாலும், அந்த கேரக்டர்ல வாழ்ந்துருக்காங்கன்னே சொல்லலாம். பாட்டியை பார்த்தாலே ஊரே தெறிச்சு ஓடுற மாதிரி காட்டியிருக்காங்க..
செம மாஸ்! கமல் ரசிகரா அவர் பண்ற லூட்டியும், போடுற பாட்டும் தியேட்டர்ல சரவெடி தான்! “பெண்கள் சும்மா இருக்காம ஏதாவது ஒரு வேலை செய்யணும், அதுதான் கடைசி வரைக்கும் காப்பாத்தும்”னு வர்ற வசனங்கள் எல்லாம் அப்ளாஸ் அள்ளுது.
இங்கிலீஷ் தெரியாதவங்க கிட்ட இங்கிலீஷ்ல பேசி சீன் போடுறது பெருமை இல்ல, அது பைத்தியக்காரத்தனம்னு சொல்ற இடம் வேற லெவல்!
படம் ரிலீஸ் ஆன முதல் நாளே உலகளவுல ரூ. 3.3 கோடி வசூல் பண்ணி செம ஓப்பனிங் கொடுத்திருக்கு.
“பெண்ணியம்னா வெறும் பேச்சு மட்டும் இல்ல, ஜெயிச்சு காட்டணும்”னு படத்துல சொன்ன மாதிரி, நிஜமாவே இந்த படம் ஜெயிச்சிருச்சு!
காமெடி, எமோஷன், மெசேஜ்னு ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். குடும்பத்தோட போய் தாராளமா பாக்கலாம்!


