in

தூய்மை பணியாளர்களை கெளரவித்த வாடகை கார் ஓட்டுநர்கள்

தூய்மை பணியாளர்களை கெளரவித்த வாடகை கார் ஓட்டுநர்கள்

 

தங்கள் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் 40 தூய்மைப் பணியாளருக்கு புடவை – இனிப்பு வழங்கிய வாடகை கார் ஓட்டுநர்கள்.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் விமல்ராஜ், கார்த்திக். இருவரும் வாடகைக்கு‌ கார் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தினமும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையைக் கண்டு அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணத்தில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 40 பேருக்கு புடவை மற்றும் இனிப்புகள் வழங்கி இன்று அவர்களை கௌரவித்தனர்.

What do you think?

தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு தரிசன நேரத்தில் மாற்றம்

பாபநாசம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறார்கள் உட்பட 4 வாலிபர்கள் கைது