in

புதிய விலை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதிய விலை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

செப்டம்பர் 1 முதல் புதிய விலை நிர்ணயம் செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 1 முதல் புதிய விலை நிர்ணயம் செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும், குறுவை கொள்முதல் செய்யபட உள்ள நிலையில், அடிப்படை கட்டமைப்புகளை முன்கூட்டியே திட்டமிட்டு, நெல் மூட்டைகள் தேக்கம் அடையாத வகையில், திறந்தவெளி கிடங்குகளை அமைத்து தடையின்றி கொள்முதல் செய்ய வேண்டும்.

டிஏபி, யூரியா உள்ளிட்ட உர தட்டுப்பாடுகளை இன்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்கிற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

சுதந்திர தின விழாவையொட்டி காவல் துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் இறுதி அணிவகுப்பு ஒத்த்திகை

புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா