சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவிற்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இன்று சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரத்தில் அவருக்கு மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்தில் சுவாமி சகஜானந்தாவின் சமாதி உள்ளது. இங்கு சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சுவாமி சகஜானந்தாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் அங்குள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்தார்.இதையடுத்து சிதம்பரத்தில் உள்ள சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி சகஜானந்தா மணி மண்டபம் முன்பு எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அலங்கார வளைவை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவ ளவன்எம்பி, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் இணைந்து சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


