சுட்டெரிக்கும் வெயிலைத் தணித்த திடீர் மழை: நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.
நாகப்பட்டினம் நகர்ப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நாகூர், புத்தூர், திருமருகல், உள்ளிட்ட பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, பின்னர் பரவலாக கனமழை பெய்தது. வெப்பத்தைத் தணிக்கும் வகையில் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

