குத்துச்சண்டை போட்டியில் மயிலாடுதுறை குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம்
சார்பில் குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி தீபா 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கத்தையும்,ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் குருதர்ஷன் வெள்ளிப் பதக்கமும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்து .


சாதனை படைத்துள்ள இருவரையும் பாராட்டி சந்தன மாலை,சால்வை அணிவித்து பள்ளிக்கு உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவிகள் மத்திய அரசால் நடத்தப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அபர்ணா,சத்தியஸ்ரீ மாணவிகள்
தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதையும்
பாராட்டி பள்ளியின் புரவலர் தருமை ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பாராட்டி அருளாசி வழங்கினார்


தொடர்ந்து பள்ளியின் ஆட்சிமன்ற நிருவாகக் குழுவினர்.முதல்வர்,துணை முதல்வர்,பொறுப்பாசிரியர்கள்,ஆசிரியபெருமக்கள்,மாணவர்கள் மற்றும் அலுவலகத்தோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


