தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் விழா
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கரும்பு தோரணம் கட்டி, மண் பானையில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும் போது மாணவிகள் குழவையிட்டு, கும்மியடித்து நாடுப்புற பாடல்களுக்கு உற்சாக ஆட்டம் போட்டு ஃபயர் டான்ஸ் ஆடினர்..
தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
ஒவ்வொரு துறை சார்பிலும் மாணவ, மாணவிகள் தனி தனியாக பானை வைத்து பொங்கலிட்டனர்.

பால் பொங்கி வரும் போது மாணவிகள் குழவையிட்டு கும்மியடித்து கொண்டாடினார்கள்.
பின்னர் மாணவ, மாணவிகள் நாட்டுப்புற பாடல்களுக்கு உற்சாக ஆட்டம் போட்டு ஃபயர் டான்ஸ் ஆடி பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.


