in

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்

 

புதுச்சேரியில் எந்த ஒரு அரசு துறைகளின் அனுமதியின்றி நடனம், கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் ரெஸ்டோ பார்கள் மீது துணைநிலை ஆளுநர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,

புதுச்சேரியில் செயல்படும் ரெஸ்டோ பார்களுக்கு மது அருந்துவதற்கும், உணவு வழங்குவதற்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் ரெஸ்டோ பார் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக நடனம், கேளிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், துணைநிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரெஸ்டோ பாரில் நடந்த இளைஞர் கொலைக்கு முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ள திமுக அமைப்பாளர் சிவா, அவரது சொந்த தொகுதியான வில்லியனூரில் நடந்த பாஜக பிரமுகர் கொலை, சந்தன மர கடத்தல், போலி மதுபான தொழிற்சாலை, திமிங்கல எச்சம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு பொறுப்பேற்று பதவி விலக தயாரா என கேள்வி எழுப்பினார்..

What do you think?

புதுச்சேரி தொண்டமாநத்தம் அருள்மிகு ஸ்ரீ பிடாரி மீனாட்சி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா தேரோட்டம்

திருச்செந்தூர் கோவில் கொடியேற்றம்