ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்
நம்பெருமாள் இன்று (பகல் பத்து) 5 ஆம் நாளில் – திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி;

அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைரஅபய ஹஸ்தம் சாற்றி;
அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ; திருமார்பில் – ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் ;

அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை; “அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து பின் சேவையாக – சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை ; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாத்திக்கிறார்


