in

ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோவில் மண்டலபூஜை அபிஷேக ஆராதனை

ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோவில் மண்டலபூஜை அபிஷேக ஆராதனை

 

பாலாமடை கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோவிலில் மண்டலபூஜையின் ஒரு நிகழ்வாக சுவாமி அம்பாளுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளாள பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தாிசனம் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை அக்ரஹாரத்தில் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

நூற்றாண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் மங்களாம்பிகா சமேத மங்களாங்குரேஸ்வரா் மற்றும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத ஸ்வாமி என தனித்தனி சன்னதிகள்அமைந்துள்ளது.

மேலும் மகான் நீலகண்ட தீட்சதர் அவர்களது அரிஷ்டானம் அமைந்துள்ளது. திருமணத்தடை குழந்தை பாக்கியம் என வேண்டுதல் பாிகார ஸ்தலமாக விளங்குகிறது.

கடந்த 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடா்ந்து 41 நாட்கள் மண்டபூஜைகள் நடைபெறுகின்றது. அதன் ஒரு நிகழ்வாக இன்று காலை சுவாமி அம்பாளுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதற்காக திருக்கோயில் முன் மண்டபத்தில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் நடைபெற்றது. பூா்ணாகுதி நடைபெற்றதை தொடா்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு மாபொடி மஞ்சள் வாசனைபொடி பால் தயிா் பஞ்சாமிருதம் தேன் இளநீா் அன்னம் வீபூதி சந்தணம் என பல்வேற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

நிறைவாக கும்ப கலசம் ஆலய பிரதஷ்சணமாக எடுத்த வரப்பட்டு சுவாமி அம்பாளுக்கு மகா அபிஷெகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்த சுவாமி அம்பாளுக்கு மகா ஆரத்தி நடைபெற்றது.

அதேபோல் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத ஸ்வாமி க்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர்.

What do you think?

 சிறுமளஞ்சி உச்சினிமாகாளியம்மன் கோவில் கொடை விழா

ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை கடித்த முதலை