in

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் மென்பொருள் கோளாறு கோட்ட மேலாளர் பேட்டி

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் மென்பொருள் கோளாறு கோட்ட மேலாளர் பேட்டி

 

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் மென்பொருள் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது: ராமேஸ்வரம் ராமநாதபுரம் இடையான மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் பேட்டி:

பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் இயக்க பயன்படுத்தும் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் இப்பிரச்சனை ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட மேலாளர் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட செங்குத்து தூக்கு பலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தை கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அன்றில் இருந்து பாம்பன் புதிய செங்குத்து தூக்குபாலம் வழியாக ராமேஸ்வரத்துக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்கு பாலம் இயக்கப்பட்டபோது கீழே இறக்க முடியாமல் கோளாறு ஏற்பட்டது.

இதனால் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக செங்குத்து பாலம் வழியாக ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டது.

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்வதற்காக தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா இன்று காலை மதுரையிலிருந்து ஆய்வு ரயிலில் புறப்பட்டு பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் வந்தடைந்தார்.

முன்னதாக பாம்பன் கடலில் அமைந்துள்ள செங்குத்து தூக்கு பாலம் அருகே உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்ததுடன் செங்குத்து தூக்கு பாலத்தை முழுமையாக ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தை இயக்க பயன்படுத்தப்படும் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் உடனடியாக கோளாறு சரி செய்யப்பட்டது தற்போது மென்பொருளில் ஏற்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிவடையும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் பாம்பன் தூக்கு பாலத்தில் எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாத வண்ணம் முழுமையாக பணிகள் நடைபெற்று வருகிறது. பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்களை இயக்குவதில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை இவரும் காலங்களில் இவ்வாறான தொழில்நுட்ப கோளாறு ஏற்படாது என்ற நம்பிக்கை உள்ளது என்றார். இயக்குவதற்கு போதிய மேலும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் வரையிலான மின்மயமாக்கப்பட்ட தொடங்கப்படுவது குறித்து நேற்று நள்ளிரவு முதல் கட்ட ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவை தொடங்கப்படும் என்றார். மேலும் ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது குறித்து இந்திய ரயில்வேதுறை தான் முடிவு செய்ய முடியும் என்றார்.

What do you think?

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு மரியாதை