கூலி, குபேரா படத்தின் Character..ருக்கும் உள்ள ஒற்றுமை
தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் புதிய விளம்பர போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான கூலி...இக்கும் குபேரா…ரின் Character..ருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
இரு நடிகர்களும் தேவா என்ற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தில், ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
குபேரா படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கும் தேவா என்று பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய நட்சத்திரங்களின் படங்களுக்கு இடையிலான இந்த எதிர்பாராத ஒற்றுமை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டியுள்ளது.
தனுஷின் 23 வது ஆண்டு சினிமாவைக் கொண்டாடும் வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டரில், தேவா(தனுஷ்) கடற்கரையோரம் நடந்து செல்லும் Poster..ருடன் 23 ஆண்டுகளாக கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு, பயணம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும், குபேரவின் அடுத்த அடுத்த அப்டேடுகள் விரைவில் வெளியாகும் காத்திருங்கள் என்று பட குழு குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஜூன் 20 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.