அத்தி வரதர் என அழைக்கப்படும் தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா
அத்தி வரதர் என அழைக்கப்படும் தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா 11 ந்தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
7ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது .
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சீபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் பெருமாளை ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்திற்கு ‘அத்திகிரி’ என்றும் பெயரும் உண்டு. வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் நகரில், பத்து நாட்கள் நடைபெறும் தேவராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க சப்பரம், சேஷ வாகனம், தங்கப் பல்லக்கு, சிம்ம வாகனம், சூரிய பிரபை, ஹனுமந்த வாகனம், சந்திரப் பிரபை, யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புண்ணியகோடி விமானம், வெட்டிவேர் சப்பரம் ஆகியவற்றில் வரதராஜ பெருமாள், வலம் வந்து அருள்பாலிப்பார்.
விழாவின் 7ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன், சடாரியும் மேளதாளங்களும் முழங்க, கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து வரத பெருமான் காஞ்சிபுரம் காந்தி சாலையில் தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருளினர்.
100 டன் எடையும், 76 அடி உயரமும், ஐந்து நிலைகளும் கொண்ட திருத்தேரில் , கொண்டை முடிச்சு அலங்காரத்தில், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் வீற்றிருக்கும் தேரை முக்கிய பிரமுகர்கள் பக்த கோடிகள் என ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் இழுத்து சென்றனர். இதில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா , அத்தி வரதா என முழக்கமிட்டு பயபக்தியுடன் வழிபட்டனர்.
திருத்தேர் காந்திரோடு தேரடியில் புறப்பட்டு மூங்கில் மண்டபம்,பஸ் நிலையம், சங்கரமடம், பூக்கடை சத்திரம் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தேரடி மதியம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், புளியோதரை, சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தேரோட்டம் நடைபெறுவதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாநகராட்சியின் எல்லைப் பகுதியில் நான்கு தற்காலிக பேருந்து நிறுத்துங்கள் அமைக்கப்பட்டு நகருக்குள் வாகனங்கள் செல்லாதவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்த கோடிகளுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக கைத்தறி பிரிவு துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர்கள் பாலாஜி, ஜெயராஜ் , கோல்டு ரவி,ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் படுநெல்லி தயாளன்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் தமிழரசன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் பி.எஸ்.சதீஷ்,மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் அய்யம்பேட்டை ராஜி, அண்ணா தொழிற்சங்க மண்டல இணை செயலாளர் கமலக்கண்ணன், பகுதி கழக துணை செயலாளர்கள் கபாலி,சரண் ஜீவா, பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி, மாமன்ற உறுப்பினர் புனிதா சம்பத், 50ஆவது வார்டு வட்ட செயலாளர் பிரவீன் குமார்,வட்ட செயலாளர்கள் கோபால்,அம்மா பாலு,சம்பத் தனபால், பிரகாஷ்,மகளிரணி நீலாவதி, மாதவி ஆகியோர் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.