நாட்டின் தலைவிதியை விஜய் கைகளில் கொடுக்க வேண்டுமா? பிரகாஷ் ராஜ் கேள்வி
நடிகர் பிரகாஷ் ராஜ், சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, நேர்காணல்களிலும் அரசியல் குறித்து தைரியமாக குரல் கொடுப்பவர்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளிகையில், தனது சக நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசினர், இருவருக்கும் அரசியலுக்கான ‘தொலைநோக்கு’ பார்வை இல்லை.
இருவரையும் இருபது வருடங்களாக தனக்குத் தெரியும். “பவன் தனது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து வந்தவர், அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பிரபலமான இயக்குனர், விஜய் அரசியலுக்கு புதியவர், நாங்கள் ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதில்லை.
அவர்கள் நடிகர்கள், புகழ் காரணமாக, அவர்கள் அரசியலில் நுழைந்தனர், இரண்டு நடிகர்களுக்கும் நாட்டில் ஒரு ‘தொலைநோக்கு’ பார்வையோ அல்லது ‘பிரச்சினைகள் பற்றிய புரிதல்’ இல்லை பவன் தனது கட்சியைத் தொடங்கிய பத்து ஆண்டுகளில்,
அவருக்கு மக்கள் பிரச்சினைகள் பற்றிய புரிதல் இருப்பதாக தெரியவில்லை. நான் அதை விஜய்யிடமும் காணவில்லை. ஆனால் பவன் அல்லது விஜய் போன்றவர்கள் அரசியலில் நுழையும்போது, மக்கள் அரசியல் அமைப்பில் ஒரு மாற்றத்தை தேடுகிறார்கள்.
அதன் காரணமாக அவர்களுக்கு இடங்கள் கிடைக்கக்கூடும், ஆனால் பின்னர், அவர்கள் தங்கள் பெருபான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும். விஜய் மேடையில் பேசும்போது படத்தில் டயலாக் பேசுவது போல் பேசுகிறார், ஆனால் எப்படிப் போராடுவது என்பதில் ஆழமான புரிதல் இல்லை பவன் மற்றும்’ விஜய்’ மிகவும் பிரபலமான நடிகர்கள், ஆனால் நாட்டின் தலைவிதியை அவர் கைகளில் கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர்.
பிரகாஷ், பவன் மற்றும் விஜய் இருவருடனும் போக்கிரி, கில்லி, ஜல்சா மற்றும் வக்கீல் சாப் போன்ற பிரபலமான படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் அவர்களின் வரவிருக்கும் படங்களான ஜன நாயகன் மற்றும் தே கால் ஹிம் ஓஜி ஆகியவற்றிலும் நடிக்கிறார்.