in

செஞ்சி அருகே செம்பாத்தம்மன் – பச்சையம்மன் தேர் திருவிழா

செஞ்சி அருகே செம்பாத்தம்மன் – பச்சையம்மன் தேர் திருவிழா

 

செஞ்சி அருகே செம்பாத்தம்மன் – பச்சையம்மன் தேர் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பொன்பத்தி கிராமத்தில் உள்ளஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் ஸ்ரீ மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா மற்றும் கிராம தேவதை திருத்தேர் உற்சவ விழா கடந்த மே மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இரவு நடைபெற்றது.

இதை முன்னிட்டு செம்பாத்தம்மன் பச்சையம்மன் முனீஸ்வரன் திரௌபதி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

இதையடுத்து உற்சவர் செம்பாத்தம்மன், பச்சையம்மன், கிருஷ்ணன், அர்ஜுனன், திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினர்.

திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேர்விழாவில் பொன்பத்தி மற்றும் செஞ்சி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

நல்லத்துக்குடி குயிலாண்ட நாயகி அம்மை ஆலந்துறையப்பர் ஆலய மகா கும்பாபிஷேகம்

புவனகிரி ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்