in

ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை…!

ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை…!

 

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய்யின் முதல் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தால் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

தவெக தலைவர் விஜய் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் விஜய் நடத்தும் முதல் பொதுவெளி பிரசாரம் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது. இதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதாவது விஜய்யின் வாகனம் வரும் வழித்தடத்தில் எந்த இடத்திலும் வரவேற்பு அளிக்கக்கூடாது.

இந்நிகழ்ச்சியை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த அனுமதி, பிரசாரத்தின் போது விஜய்யுடன் முக்கிய நபர்கள் மட்டுமே வாகனத்தில் இருக்க வேண்டும். மேலும் தவெக தொண்டர்கள் 10,000 பேர், பொதுமக்கள் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

பிரசார கூட்டத்தையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மைதானம் முழுவதும் மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

What do you think?

மகேஷ் பாபு இந்தியாவிலேயே ரொம்ப அழகான ஹீரோ

சட்டென டென்ஷன் ஆன யோகிபாபு ..புகார்களுக்குப் உடனே பதிலடி… மேடையில் கேட்கப்பட்ட கேள்வி.?