in

பேருந்தின் படியில் வவ்வால் போல  தொங்கி வரும் பள்ளி மாணவர்கள்

பேருந்தின் படியில் வவ்வால் போல  தொங்கி வரும் பள்ளி மாணவர்கள்
செங்கத்தில் அரசு  பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி  ஆபத்தான நிலையில் பயணம்..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பள்ளிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இளங்குன்னி கிராமத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அனுதினமும் அரசு பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இளங்குன்னியில் இருந்து செங்கம் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள்  ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்கள். ஆபத்தை உணராமல் இதுபோன்று காலை மாலையிலும் மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பேருந்தின் படியில் வவ்வால் போல  தொங்கி வருகின்றனர்.
இதனை செங்கம் அரசு பணிமனை அதிகாரிகள் ஆய்வு செய்து கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

What do you think?

செங்கம் அருகே தனியார் பேருந்தில் அரசு பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி

மாற்று இடத்திற்கு நகர்த்தப்பட்ட பஞ்ச மூர்த்திகள் மர தேர்