சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சிதம்பரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு. சார் -ஆட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பங்கேற்று ஆய்வு நடத்தினர். 15 வாகனங்களுக்கு தகுதி சான்று ரத்து செய்யப்பட்டது.
சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 76 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 389 வாகனங்கள் உள்ளது. இன்று பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு, சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்த ஆய்வில் 232 வாகனங்கள் பங்கேற்றன. சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று வாகனங்களை ஆய்வு செய்தனர்.
வாகனங்களில் அவசர காலக் கதவு, தீர்த்தடுப்பு கருவி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, கேமரா உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாகனங்களின் பர்மிட், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு குறைபாடுகள் உடைய 15 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. இந்த ஆய்வு நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் மோகன், வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் வாசுராஜ், தீயணைப்பு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.