100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய சப்தஸ்தான பல்லக்கு திருவிழா
தஞ்சை மாவட்டம் பாபநாசம்அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய சப்தஸ்தான பல்லக்கு திருவிழா ……
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை தவள வெண்ணகையாள் பாலைவனநாத சுவாமி திருக்கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சப்தஸ்தான பல்லக்கு திருவிழா தொடங்கியது.
திருப்பாலைத்துறை பாலைவனநாத சுவாமி திருக்கோவில் சித்திரை மாத பௌர்ணமி பிரம்மோற்சவ விழா கடந்த 1 -ம் தேதி தொடங்கி 17 -ம் வரை வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கடந்த 3ஆம் தேதி வேதங்கள் மேளத்தாளங்கள் நாதஸ்வர கச்சேரிகள் முழங்க வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது ஒவ்வொரு நாளும் சாமி அம்பாள் ஒவ்வொரு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
முக்கிய நிகழ்வான 16 ஆம் நாள் திருப்பாலைத்துறை பாலைவன நாத சுவாமி திருக்கோவிலிருந்து கண்ணாடி பல்லக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
அலங்கார தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை கோபுர தரிசனம் என பல நிகழ்வுகள் வேதங்கள் முழங்க மேளத்தாள இன்னிசை கச்சேரியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் புறப்பட்டு சென்றார்.
திருப்பாலைத்துறை பாபநாசம் பகுதியில் கண்ணாடி பல்லாக்கு புறப்பட்டு திருக்கோயில் வழக்கப்படி வீதி உலா காட்சி நடைபெற்றது.