படத்தின் டைட்டில்…லை அறிவித்த ரவி மோகன்-கார்த்திக் யோகி கூட்டணி
வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் தயாரித்து நடிக்க உள்ள, படத்தின் தலைப்பை “ப்ரோ கோட்” என்று நேற்று அறிவித்தனர்.
ப்ரோ கோட் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார், ரவி மோகனுடன் அவர் இணைந்து பணியாற்றும் முதல் படமாகும்.
படம் பற்றி கார்த்திக் பேசுகையில், “ப்ரோ கோட்” படத்தில் ரவி மோகன் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.
“இந்த கதாபாத்திரம் அவருக்காகவே உருவாக்கப்பட்டது நான் கதையை சொன்னபோது, அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் அவரே அதை தயாரிக்கவும் முடிவு செய்தார்.”
தனது முதல் தயாரிப்பு முயற்சியில் தன்னை நம்பியதற்காக ரவி மோகனுக்கு நன்றி தெரிவித்தார். ஆக்ஷன் காமெடி படமாக இருக்கும் என்று கூறிய கார்த்திக் “ஒரு நல்ல ஆக்ஷன் காமெடி படமாக எடுக்கப்பட்டு சிறிது காலம் ஆகிவிட்டது.
ப்ரோ கோட் படத்தில் நகைச்சுவை வித்தியாசமானதாகவும் கதை வித்தியாசமான பாணியிலும் இருக்கும்”. செப்டம்பரில் படம் திரைக்கு வருவதற்கு முன்பு வெளியிடப்படும் வீடியோவில், கதைக்களம் மற்றும் தலைப்பின் முக்கியத்துவம் குறித்த கூடுதல் விவரங்களை கொடுக்கும் என்று கூறினார்.
இந்த படத்தை ரவி மோகன் தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் பேனரில் இயக்குகிறார். இப்படத்தில் நான்கு கதாநாயகிகள், அர்ஜுன் ரெட்டி புகழ் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.


