in

என்னை மாய்த்துக் கொள்ள போகிறேன்… கண்ணீர்விட்டு கதறிய இயக்குனர்

என்னை மாய்த்துக் கொள்ள போகிறேன்… கண்ணீர்விட்டு கதறிய இயக்குனர்

 

இயக்குனர் பிரபதீஸ் சாம்ஸ் இயக்கத்தில் சென்றமாதம் வெளியான கஜானா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இப்படத்தில் பிரபாகர், வேதிகா, யோகி பாபு, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரபதீஸ் தன்னை ஒரு நிறுவனம் ஏமாற்றிவிட்டதாகவும் தன் வாழ்வை மாய்த்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கதறியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது தனது கணவரை காணவில்லை என்று இயக்குனரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் நான் கஜானா திரைப்படத்தை இயக்கி தயாரித்தேன் ஹிந்தி உரிமையை ஆட் வாய்ஸ் மீடியா உரிமையாளர் ஆதித்யா பாட்டியா வாங்கினார்.

சவுத் இந்திய உரிமை படம் வெளியாகும் போது வாங்கிக் கொள்வார்கள் என்று கூறினார். இதனால் நானும் பிரபல நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தேன் ஆனால் பாதி பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஒன்றே முக்கால் கோடி பணத்தை எனக்கு தரவில்லை எனது படத்தை பெரும் தொகைக்கு ஜியோ ஹாட்ஸ்டாரில் விற்றுவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் இழந்துள்ளேன் நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு நல்ல முடிவை தர வேண்டும் இல்லை என்றால் நான் என்னை மாய்த்துக் கொள்வேன் என்று வெளியே வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியை பார்த்து அதிர்ந்த நடிகர் இனிகோ பிரபாகரன் நான் ஞாயிற்றுக்கிழமை அவரை சந்திக்க வீட்டிற்குச் சென்றேன் மிகவும் சோர்வாக இருந்த அவரிடம் என்ன என்று விசாரித்த போது நான் பெரிய அளவில் ஏமாந்து விட்டேன் எனக்கே தெரியாமல் ஹிந்தி Version...னை ஜியோ ஹாட் ஸ்டாரில் இருக்கு இதனால் நான் மனம் உடைந்து விட்டேன் என்று சொன்னார் எல்லாம் சரியாகிவிடும் அமைதியாக இருங்கள் என்று கூறி வந்து விட்டேன் என்றார்.

What do you think?

நண்பர்களுக்கு விருந்து கொடுத்த Ravimohan, கெனிஷா

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா