தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பது நம் கடமை என உறுதிமொழி ஏற்று பேரணி
அரசு பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் வாக்களிப்பது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜா தேசிங்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் புஷ்பாவதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த தேசிய வாக்காளர் தின தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி ஆனது செஞ்சி காந்தி பஜார் வழியாக செஞ்சி சென்று செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் வாக்களிப்பது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


