ரஜினி – ஷாருக் கான்: ‘மெகா’ கூட்டணி! ‘ஜெயிலர் 2’ வில் என்ன ரோல் தெரியுமா. ? சினிமாவே அதிரப்போகுது!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்குற படத்தைப் பத்தி ஒரு சின்ன நியூஸ் வந்தாலே அது சோஷியல் மீடியாவுல காட்டுத்தீ மாதிரி பரவும்.
இப்போ ‘ஜெயிலர் 2’ படத்தைப் பத்தி வர்ற அப்டேட்ஸ் எல்லாம் ரசிகர்களைத் தூங்க விடாம பண்ணிட்டு இருக்கு. குறிப்பா, ஷாருக் கான் இந்தப் படத்துல நடிக்கப்போறாருங்கிற தகவல் இப்போ கோலிவுட், பாலிவுட் ரெண்டையுமே அதிர வைச்சிருக்கு.
2023-ல ‘ஜெயிலர்’ படம் வந்து எவ்வளவு பெரிய ஹிட் ஆச்சுன்னு நமக்கே தெரியும்.
“முத்துவேல் பாண்டியன்” ரோல்ல தலைவர் தெறிக்க விட்டிருந்தாரு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்துல வர்ற ரெண்டாம் பாகம் இப்போ அதைவிட டபுள் மஜாவா இருக்கப்போகுது.
முதல் பாகத்துல மோகன்லால், சிவராஜ்குமார்னு பல மொழி ஸ்டார்ஸ் வந்து மிரட்டுனாங்க. அதே ஃபார்முலாவை இப்போ ‘ஜெயிலர் 2’-ல இன்னும் பெருசா பண்ணப்போறாராம் நெல்சன்.
பாலிவுட் பாதுஷா ஷாருக் கான், ரஜினிக்கு ரொம்ப நெருக்கமான நண்பரா இந்தப் படத்துல நடிக்கப்போறதா ஒரு தகவல் கசிஞ்சிருக்கு. பொதுவா ஷாருக் கான் வர்றாருன்னா சும்மா ஒரு சீன்ல வந்துட்டு போவாருன்னு நினைப்போம். ஆனா, இந்தத் தடவை மேட்டர் வேற: ரஜினியோட உயிருக்குயிரான நண்பனா ஷாருக் நடிக்கிறாராம்.
கதைப்படி முத்துவேல் பாண்டியனோட வாழ்க்கையில வர்ற ஒரு பெரிய பிரச்சனையைத் தீர்த்து வைக்கிற அளவுக்கு இவரோட கேரக்டர் ரொம்ப ‘வெயிட்டா’ இருக்குமாம்.
அதாவது, ரெண்டு சூப்பர்ஸ்டார்களையும் ஒண்ணா ஸ்கிரீன்ல பாக்குறது மட்டும் இல்லாம, அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற ஃப்ரெண்ட்ஷிப் எமோஷனலா இருக்கப்போகுது.
மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதின்னு ஒரு பெரிய பட்டாளமே ‘ஜெயிலர் 2’ லிஸ்ட்ல இருக்காங்க.
இப்போ ஷாருக் கானும் சேர்ந்தா, இந்தி பெல்ட்ல படம் வேற லெவல்ல ஓப்பனிங் எடுக்கும். ஒட்டுமொத்த இந்தியாவையுமே ஒரே படத்துல கவர் பண்ணணும்ங்கிறதுதான் பிளானாம்.
நிஜ வாழ்க்கையிலயும் ரஜினியும் ஷாருக் கானும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப மதிக்குற நல்ல நண்பர்கள். அந்த ‘ரியல்’ நட்பு இப்போ ஸ்கிரீன்ல ‘ரீல்’ நட்பா மாறப்போறது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் தான்!

