தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி 22 இடங்களில் பொது மருத்துவ முகாம்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 22 இடங்களில் பொது மருத்துவ முகாம். 1000-திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு பாபநாசம், சுவாமிமலை, அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, மெலட்டூர், கபிஸ்தலம், சாலியமங்கலம் உட்பட 22 இடங்களில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி தலைமை வகித்தார். பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
மருத்துவ முகாம்களில் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை, இசிஜி பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, காது ,மூக்கு, தொண்டை உட்பட பொது மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள்.

இம்முகாம்களில் 1000-திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. இம்முகாமில் மாவட்ட இணை செயலாளர் வினோத், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், ரம்யா ,
பாபநாசம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் வினோத், சசி, சுதாகர், ஒன்றிய பொருளாளர் சாகுல் ஹமீது, ஒன்றிய துணை செயலாளர் பிரவீன்குட்டி ,நகரச் செயலாளர்கள் உதயசூர்யா, வெங்கடேசன், சுடலை முத்து, கணேஷ், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும், சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


