in

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் மழை, நேற்று அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் 74 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னி வெயில் வட்டிவதைத்து வந்த நிலையில் அவ்வப்போது விட்டுவிட்டு ஆங்காங்கே லேசான கோடை மழை பெய்து வந்தது.

அதனை தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக மயிலாடுதுறை குத்தாலம், பாலாக்குடி, வில்லியநல்லூர், நீடூர், மணல்மேடு, பட்டவர்த்தி செம்பனார்கோயில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழையானது பெய்தது.

கடந்த இரண்டு தினங்களாக மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்று சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த நிலையில், நேற்று காலை 8:30 மணி துவங்கி இன்று காலை 8:30 மணி வரை
மயிலாடுதுறையில் 45.00மி மீ மணல்மேடு 53.00 மிமீ, சீர்காழி 2.60 மிமீ, கொள்ளிடம் 68.00 மிமீ, தரங்கம்பாடி10.00 மி.மீ செம்பனார்கோயில் 74.60மி.மீ மழை பதிவானது.

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

தேமுதிக மாவட்ட செயலாளர் முதல் ஆலோசனைக் கூட்டம்

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில்  பிரம்மோற்சவம் திருத்தேரோட்டம்