தேனியில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
தேனியில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் கோபால்,மதுரை மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பஞ்சமி நிலங்கள் 12000 ஏக்கருக்கு மேல் உள்ளதாகவும், அந்த நிலங்கள் அனைத்தும் மாற்று சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பினை செய்து வருகின்றனர் என்றும், இந்த பஞ்சமி நிலங்களை தேனி மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உரிய நபர்களுக்கு சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி பெரியகுளம் போடி உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பஞ்சமி நிலங்களை உரிய நபர்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்.


