in

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம்

 

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கைது.

திமுக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல் படுத்துவோம் என்று அறிவித்திருந்தது.

ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரண்டு ஊதிய குழுக்களில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் தமிழக அரசை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக ஆசிரியர் கூட்டணி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

What do you think?

ஆடி மாத பிறப்பையொட்டி நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் கோ பூஜை

1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி