மக்கள் சமூக நீதிப் பேரவை சமூக நல்லிணக்க பாதுகாப்பு குழு சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
குரும்ப கவுண்டர் சமுதாயத்தை பற்றியும் அதன் தலைவர் கிருஷ்ணசாமி குறித்தும் கோவையைச் சேர்ந்த பரமசிவம் என்ற நபர் இழிவாக பேசி சமுதாயத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாட்ஸ்அப் பதிவு மூலம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சமூகநீதி பேரவை சமூக நல்லிணக்க பாதுகாப்பு குழு சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் குரும்ப கவுண்டர் சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும்..
குரும்ப கவுண்டர் சமுதாயத்தையும் அதன் தலைவரையும் மிரட்டி ஆடியோ பதிவை வெளியிட்ட கோவையைச் சேர்ந்த நபரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

