மாதிரிமங்கலத்தில் தனியார் பேருந்தும் ஆட்டோவும் விபத்துக்குள்ளானது
மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலத்தில் தனியார் பேருந்தும் ஆட்டோவும் விபத்துக்குள்ளானது மூவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாதிரிமங்கலத்தில் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் முன்னே சென்ற ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது ஆட்டோவில் பயணம் செய்த வீரமணி, அவரது மனைவி ராசாத்தி மகன் ஜோதிமணி ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
மூவரையும் அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து குத்தாலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


