in

வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொன்னம்மா காளியம்மன் ஆலய பால்குடம் அலகு காவடி திருவிழா

வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொன்னம்மா காளியம்மன் ஆலய பால்குடம் அலகு காவடி திருவிழா

 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ளது நல்லத்துக்குடி இங்குள்ள அம்பேத்கர் பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள பழமையான கிராம தெய்வமான பொன்னம்மா காளியம்மன் ஆலயம்.

இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு காவடி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

அதனை முன்னிட்டு விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மயூரநாதர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து வீதியுலா சென்று கோயிலை சென்றடைந்தனர்.

இந்த பால்குட திருவிழாவில் வாயில் 12- அடி நீள அலகு குத்தி காவடி எடுத்து வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

பின்னர் பொன்னம்மா காளியம்மனுக்கு பால் அபிசேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.

இந்த பால்குட திருவிழாவில் 200 க்கு மேற்பட்ட பக்தர்கள் பாலகுடம் எடுத்து வந்து அம்பாளின் அருளை பெற்றனர்.

What do you think?

நள்ளிரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமபந்தி