தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா கோலாகலம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஸ்ரீ ரங்க பூபதி கல்லூரியில் பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது.சமத்துவ பொங்கலை முன்னிட்டு மாணவ-மாணவிகள் பொங்கல் வைத்தும் பொங்கல் திருநாளை கொண்டாடும் .

வகையில் கோலத்தில் உழவர் உடன் பொங்கல் கோலம், பருப்பு, கேழ்வரகு, அரிசி உள்ளிட்ட தானியங்கள் கொண்டு கோலம் போட்டும், அதேபோன்று பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், உறியடி, முறுக்கு சாப்பிடும் போட்டி பல கடவுளர் வேடமிட்டு பாரம்பரிய நடனம் கும்மி ஆட்டம் என விமர்சையாக நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்லூரி சார்பாக பரிசுகளும் வழங்கப்பட்டது.


