தியாகிகள் தினம் பாமக சார்பில் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இடஒதுக்கீட்டு போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் வரும் 17ம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இதற்காக பாமக தலைவர் அன்புமணி திண்டிவனம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ய விழுப்புரம் மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம் தி ண்டிவனம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பாமக மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாமக மாவட்ட தலைவர் சேது, பாமக பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பாலாஜி, சம்பத், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாமக தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, மாவட்டத்தில் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


