எனக்கு அமைதியே ஆறுதல் ..ஆர்த்தி
நடிகர் ரவி மோகன்’..னை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆர்த்தி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் இவர்கள் கடந்த வருடம் விவாகரத்தை அறிவித்தனர்.
இவர்களின் விவாகரத்து தற்பொழுது நீதிமன்றத்தில் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி போஸ்ட் செய்வதால் இனிமேல் இருவரும் சமூக வலைதளத்தில் பதிவிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் பேரில் இருவரும் சைலன்டாக அவரவர் வேலையில் பிஸி யாக இருக்கும் நிலையில் ஆர்த்தி தன்இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல் சண்டைகள் இல்லை வாழ்கை இல்லை வாலை ஆட்டி அன்பு காட்டும் செல்ல பிராணிகள் மட்டும் எனக்கு போதும் நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது.
பதில்கள் தேட விருப்பம் இல்லாத எனக்கு அமைதியே ஆறுதல். வாழ்கை இன்பமும் கசப்பும் கலந்தது. வெள்ளை தாளில் கருப்பு நிறத்தால் மட்டுமே எழுத முடிவது வேதனை பல சோதனைகளை கடந்தாலே பிரகாசிக்க முடியும் என்று ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.


