பறந்து போ… Movie Review பெற்றோர்களுக்கான அட்வைஸ்…
Emotional படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம், பறந்து போ மூலம் புத்துணர்ச்சியூட்டும் வகையில் வித்தியாசமான இதயத்தைத் தொடும் நகைச்சுவை படத்தை வழங்கியிருகிறார்.
தனது வழக்கமான தொனியைக் கைவிட்டு, குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு படத்தின் முலம் நமக்குக் பாடம் எடுத்திருக்கிறார்..
தந்தை-மகன் பிணைப்பு மிகவும் நுட்பமாகவும் வலியுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது சிவா, நகைசுவை கலந்த உணர்ச்சி பூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் கதைக்கு வலிமையை சேர்க்கிறார்கள், அதே நேரத்தில் சந்தோஷ் தயாநிதியின் இசை ஒவ்வொருவரின்’ உணர்ச்சித் துடிப்பையும் அதிகரிக்கிறது.
இந்தப் படம் வழக்கமான பாணியில் இல்லாமல் மாற்றுப்பாதையில் ராம் நம்மை அழைத்து சென்றிருகிறார். சினிமா சக்தி வாய்ந்ததாக இருக்க ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்பதற்கு பறந்து போ சிறந்த சான்று.
பறந்து போ ஒரு பிடிவாதமான பள்ளி மாணவனையும், பண ரீதியாக சிரமப்படும் அவனது தந்தையையும் பின்தொடர்ந்து நகர வாழ்க்கையில் அதிகரித்து வரும் பிரச்சனையில் இருந்து தப்பிக்க சாலைப் பயணம் கொடுக்கும் அனுபவமே பறந்து போ.
ஹீரோ (Siva) ஒரு ஆர்கானிக் உணவு வணிகத்தை வைத்திருக்கிறார். அவரது தாயார் குளோரி (கிரேஸ் ஆண்டனி) கோயம்புத்தூரில் உள்ள ஒரு கண்காட்சியில் புடவை கடையில் வேலை செய்கிறார்.
இருவரும் காதலித்து மாதம் மாறி திருமணம் செய்ததால் தனிமையில் வாழும் சூழ்நிலை அவர்களின் எட்டு வயது மகன் அன்பு பள்ளியில் செலவிடும் சில மணிநேரங்களும், மீதமுள்ள நேரங்கள் சென்னையில் உள்ள அவனது சிறிய அடுக்குமாடி குடியிருப்பின் நான்கு சுவர்களுக்குள் நண்பர்கள் யாரும் இல்லாமல் இன்டர்நெட்டில் முழ்கி இருக்கிறார்.
இருவரும் வேலைக்கு செல்வதால் பெரும்பாலும் சிறுவனை குடியிருப்பிற்குள் பூட்டி வைக்க வேண்டியநிலை. தனக்குப் பிடித்தமான ஸ்கேட்போர்டு, மடிக்கணினி, பொம்மைகள் அவனிடம் இருந்தாலும், அன்பு வெளியில் அதிக நேரம் செலவிடவும், பெற்றோருடன் இருக்கவும் விரும்புகிறார்.
ஆனால், கோகுல் மற்றும் குளோரி இருவரும் இதை அறிந்திருப்பதும் மகனுடன் நேரம் செலவிட முடியவில்லை. ஒரு நாள், குளோரி வேலை நிமித்தமாக கோயம்புத்தூரில் இருக்கும் போது, அன்புவும் கோகுலும் வெளியே செல்கிறார்கள், இது இறுதியில் ஒரு எதிர்பாராத சாலைப் பயணமாக மாறுகிறது.
அவர்களுக்கு இடையேயான முட்டாள்தனமான பதட்டங்களும் கருத்து வேறுபாடுகளும் அவர்களை எதிர்பாராத இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. விரக்தியின் பயணமாகத் தொடங்கும் பறந்து போ, வழியில் சந்திக்கும் மக்களின், கஷ்டம். துயரம், வலி, போராட்டம் ஹீரோவின் மனதை மாற்றுகிறது.
மனதை தொடும் வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள், மதன் கார்க்கி எழுதிய பாடல்கள் நிறைய படம் முழுவதும் இருந்தாலும் , நர்சரி ரைம்களை நினைவூட்டுகிறது.
பாடல்கள் படத்தின் தொனியுடன் ஒத்துப்போனாலும், ராம் பாடல்களை குறைத்திருந்தாள். பறந்து போ இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். கோகுலின் பழைய பள்ளித் தோழியான வனிதா (அஞ்சலி), அவரது கணவர் குணசேகரன் (அஜு வர்கீஸ்) மற்றும் அவர்களின் குழந்தை ஆகியோரை பார்த்த பிறகு கோகுல் அன்பின் ஆழமான பிணைப்பை உணர்கிறார்.
நகைச்சுவை நடிகராகவும் பார்த்த Siva..வை இந்த படத்தில் டைரக்டர் Siva. வின் Character..ரை மாற்றாமல் உணர்சிகளை கூட நகைசுவையுடன் வெளிபடுத்த வைத்திருக்கிறார்.
பறந்து போ’ என்பது ஒரு அழகான சிறிய குடும்பத்தின் கதை, பெற்றோர் வளர்ப்பின், முக்கியத்துவத்தையும், அவர்களுக்காக நேரம் செலவிட வேண்டும் என்பதை ஆழுதமாக சொல்கிறது.
மொத்தத்தில், பறந்து போ என்பது உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோருடன் அல்லது தனியாக நீங்கள் ரசிக்கக்கூடிய அரிய படங்களில் ஒன்றாகும்.