ஹோட்டல் அதிபரை ஏமாற்றிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
சென்னையை அடுத்த கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ராஜ் கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த ரிகானா பேகம் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது நண்பர்கள் மூலமாக ஹோட்டல் அதிபர் ராஜ் கண்ணனுக்கு பழக்கமானார் ரிகானா தனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதாகவும் கணவரை விவாகத்து செய்து விட்டதாகவும் அவரிடம் கூறியதால் ஹோட்டல் அதிபரும் தனக்கு திருமணமாகாததால் இருவரும் காதலிக்க தொடங்கினர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் நகைகள் மற்றும் பொருள்கள் அனைத்தையும் சுமார் 20 லட்ச ரூபாய்க்கு ராஜ் கண்ணன் திருமணத்திற்காக வாங்கி கொடுத்திருக்கிறார் உறவினர்கள் முன்னிலையில் திருமணமும் செய்து கொண்டனர், படப்பிடிப்பு இருப்பதாக கூறி ரிகானா அடிக்கடி வெளியூர் சென்றவர் முதல் கணவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார் திருமண ஆசை காட்டி ராஜ்கண்ணனிடம் பணத்தை மோசடி செய்திருக்கிறார் என்று பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ராஜ்கண்ணன் புகார் அளித்துள்ளார் ரிஹானா வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் ராஜ்கண்ணன் தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காகவும் லாபத்தில் பங்கு தருவதற்காகவும் கூறி என்னிடம் 18.5 லட்சம் வாங்கி இருக்கிறார்
அதன்பிறகு பணம் தரவில்லை என்னை கத்தியை காட்டி அடிக்கடி மிரட்டி வந்தார் அவர் தங்கச் சங்கிலி என்று கூறி எனது கழுத்தில் அணிவித்தார் ஆனால் அது தாலி இல்லை என்று கழட்டி வைத்து விட்டேன் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ராஜ் கண்ணன் தான் காரணம் என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.