கூட்டணி குறித்து தொண்டர்கள் விருப்பத்தை துண்டு சீட்டில் எழுதித் தரக் கூறிய ஓபிஎஸ்
ஓபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என நிர்வாகிகள் தெரிவித்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு
சட்டமன்றத் தேர்தலில் யார் கூட்டணி அமைப்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது தொண்டர்களின் விருப்பம் மற்றும் கருத்து துண்டு சீட்டில் எழுதித் தருமாறு ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார் அதற்கு நிர்வாகிகள் கூட்டணி குறித்து தாங்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
இதனால் கூட்டத்திற்குள் கட்சி நிர்வாகிகளிடம் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது
இதனை செய்தியாளர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்ததை அடுத்து தனது உதவியாளர் மூலம் செய்தியாளர்கள் அனைவரையும் கூட்டத்தில் இருந்து வெளியேற்றுமாறு அறிவுறுத்தினார்

