ஆடி அமாவாசை தினம் மோகனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றில் இன்று ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்கும் நிகழ்வு இன்று அதிகாலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அப்போது தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வினை துவங்கினர் முதலில் புனித நதியாம் காவிரி ஆற்றில் புனித நீராடி பின்னர் படையல் இட்டு அந்த படையலில் தங்களின் முன்னோர்களுக்கு அரிசி மாவிலை காய்கள் மேலும்பிண்டங்கள் வைக்கப்பட்டுமுறையாக தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு நடைபெற்றது.
பின்னர் அந்த பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டு பின்னர் வழிபாடு செய்தனர்.

இதில் நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டம் திருச்சி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்திருந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

