in

மகாநதி சீரியலில் பசுபதியின் மகனாக இனி..

மகாநதி சீரியலில் பசுபதியின் மகனாக இனி..

இயக்குனர் பிரவீன் பென்டன் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “மகாநதி சீரியலில்… தந்தையின் திடீர் மறைவுக்கு ஒரு நடுத்தரக் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனையை சுற்றி வருகிறது.

நான்கு சகோதரிகள் மற்றும் அவர்களின் தாயார் தங்கள் வாழ்க்கையை மீட்டேடுக்க, எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கவும், பசுபதி என்ற எதிரியினால் வரும் போராட்டங்கள் மற்றும் மோதல்களைப் சுற்றி செல்கிறது மகாநதி சீரியல்.

கதைகளம் மாறுகிறதோ இல்லையோ கதாபாத்திரம் மட்டும் இந்த சீரியலில் மாறிக்கொண்டே இருக்கிறது.

இந்த சீரியலில் நடந்த கதாபாத்திர மாற்றத்தை போல் வேறு எந்த சீரியலும் நடைபெறவில்லை.

சீரியளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் இருப்பதால் சீரியலை முடிக்காமல் இயக்குனரும் மாற்றத்திற்காக மாறிக்கொண்டே இருக்கிறார்.

பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என்று எதிர்பார்த்து நொந்து நோகடித்த இயக்குனர்… மகாநதி சீரியலில் எண்டு கார்டு போடுவதிற்கு முன்பே விஜய் காவேரியை ஒரு வழியாக சேர்த்து வைத்து விட்டார்.

மீண்டும் ஒரு மாற்றம் இந்த சீரியலில் நிகழ்ந்துள்ளது. அதாவது பசுபதியின் மகனாக நடித்த ராகவா..வாக இனி சஞ்சய் நடிக்கவிருக்கிறார் என்று இன்ஸ்டாகிராமில் பட குழுவினர் போஸ்ட் செய்திருகின்றனர்.

What do you think?

மருத்துவர் ச.இராமதாசு அவர்களின் அறிக்கை

அதிரடி முடிவு எடுத்த அனுஷ்கா ஷெட்டி