in

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் தேரோட்டம்

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் தேரோட்டம்

 

நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லை சந்திப்பு கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும்.

இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றைய தினம் கோலாகலமாக நடந்தது இதனை ஒட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி கைலாசநாதர் சௌந்தரவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தது பின்னர் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் 4 ரத வீதிகள் வழியாக தேர் பஞ்ச வாத்தியம் இசைக்க நமச்சிவாய கோஷம் வழங்க வளம் வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வாழைப்பழம் சூறை விடப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

What do you think?

சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரு படம் இரண்டு கிளைமாக்ஸ்

பவனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் ஆர்த்தி