நடராஜர் கோவில் 147 அடி உயர ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை
79வது சுதந்திர தின விழா நடராஜர் கோவில் 147 அடி உயர ராஜகோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்த தீட்சிதர்கள்.

கோவில் கருவறையில் இருந்து எடுத்து செல்லப்படும் தேசியக்கொடி நார்மல் காட்சி மற்றும் கழுகு பார்வை காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது:-……
பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில் நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
முன்னதாக நடராஜருக்கு பால் நெய் வைத்தியம் முடிந்த பின்பு நடராஜர் கருவறையில் சுவாமி முன்பு தேசியக்கொடி வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க தேசிய கொடியை கோவில் கருவறையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்த தீட்சிதர்கள் கிழக்கு பகுதியில் உள்ள 147 அடி உயர ராஜகோபுரத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

அதனை தொடர்ந்து சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் தீட்சிதர்கள் சார்பில் வழங்கப்பட்டது.


