ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில். வைகுண்டஏகாதசி பெருவிழா 2025 பகல் பத்து முதல் திருநாள்.
நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 1 ஆம் நாளில்
கல் இழைத்த நேர் கிரீடம் சாற்றி,சிறிய நெற்றி சுட்டி பதக்கம் அதில் சாற்றி,

திருமார்பில் – பங்குனி உத்திர பதக்கம்,அதன் மேலே அழகிய மணவாள பதக்கம் – ஸ்ரீ ரங்கநாச்சியார் பதக்கம், வைரக்கல் ரங்கூன் அட்டிகை, சந்திர ஹாரம்,சிகப்பு கல் இழைத்த அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை; அரைச் சலங்கை, 8 வட முத்து மாலை; வைரக்கல் அபய ஹஸ்தம் – அதில் தொங்கல் பதக்கம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி சேவை சாதிக்கிறார்.


