in

 நல்லிய கோடன் நகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா

 நல்லிய கோடன் நகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா

 

திண்டிவனம் நல்லிய கோடன் நகர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் திருக்கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய சாகை வார்த்தல் மற்றும் ஆடி பெருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மனுக்கு பஞ்சமுக தீபம் மற்றும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திண்டிவனம் இலுப்ப தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலய கூழாத்தல் திருவிழா

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழா மீனாட்சி அலங்காரம்