தனி ஒருவன் 2 மாஸ் update கொடுத்த மோகன் ராஜா
2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தை இயக்கியவர் ரவி மோகன் சகோதரர் மோகன் ராஜா மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் ரவி மோகன், நயன்தாரா அரவிந்த்சாமி, நாசர் உள்ளிடோர் நடித்திருந்தனர்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் தனி ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று ஆவலாக காத்திருக்கையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் அர்ச்சனா மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவிடம் தனி ஒருவன் 2 எப்பொழுது வெளிவரும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு நல்ல வேலையாக இருவரும் ஒன்றாக இருக்கும் போது இந்த கேள்வியை கேட்டீர்கள் தனி ஒருவன் படத்தின் மீது அவ்வளவு காதல் வைத்திருபவர்களுக்கு நன்றி அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் ஸ்பெஷலான படம் எல்லாம் ரெடியாக இருக்கிறது.
தயாரிப்பு நிறுவனம் சரியான நேரத்தை சொல்கிறேன் என்று கூறியுள்ளனர் என்று மோகன் ராஜா கூறியதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா முதன் முதலில் எனக்கு வருது வாங்கி கொடுத்த படம் தனி ஒருவன்.
எங்கள் தயாரிப்பில் உருவான சிறந்த படங்களில் ஒன்று தனி ஒருவன். தனி ஒருவன் படத்தைப் போல தனி ஒருவன் 2 இல்லை அதனால் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் அந்தப் படத்தில் நிறைய ஆர்டிஸ்ட் இருக்காங்க தனி ஒருவன் 2…வுக்காக பயங்கரமான Script ரெடியாகி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.


