in

திண்டுக்கலில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மடிக்கணினி வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி

திண்டுக்கலில் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் மடிக்கணினி வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினர்.


அதனைத் தொடர்ந்து அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ளது. திண்டுக்கல்லில் மட்டும் 2321 பேருக்கு மடிக்கணினி வழங்க இருக்கிறது.‌

புதுமைப்பெண் நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுகின்றனர்.

தமிழக முதல்வர் காணொளியில் பேசியபோது, மாணவர்கள் அனைவரும் மடிக்கணியை மூலம் நல்ல முறையில் வெற்றி பெற வேண்டும், அதேபோல் தேர்தலில் நானும் வெற்றிபெற்று, இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்வோம் என்றார். தேர்தல் நெருங்கி வருவதால் தான் மடிக்கணினி, பொங்கல் பரிசு போன்றவை வழங்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு,

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்த போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அவர்கள் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெறும் ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு 2021,22,23 ஆகிய காலங்களில் பொங்கல் பரிசு கொடுத்து வந்தோம். கடந்த ஆண்டு மட்டுமே கொடுக்கவில்லை அதற்கும் சேர்த்து ‌ இந்த ஆண்டு 3000 ரூபாயாக வழங்குகிறோம். மேலும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலைகளும் வழங்க இருக்கிறோம்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார். குழந்தைகள் பெண்கள் விவசாயிகள் xதொழிலாளர்கள் போன்ற அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுக ஆட்சி நடந்தி வருகிறது.‌ விஜய் குறித்த கேள்விக்கு, தேர்தலை சந்திக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

பல்வேறு தியாகங்கள் போராட்டங்கள் செய்து பேரறிஞர் அண்ணா தந்தைபெரியார், கலைஞர் அனைவரும் 75 ஆண்டுகளாக ஆட்சியமைத்து வந்திருக்கிறோம். அவர்களும் மக்களை சந்திக்கட்டும் மக்கள் தீர்ப்பு என்றார்‌.‌

எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது
நிச்சயமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவார். ஏழாவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். திண்டுக்கல்லில் இருக்கின்ற ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் திராவிட அரசு கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

What do you think?

போதை கலாச்சாரத்தை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும். சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக் கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்த்தால் வருத்தமாக உள்ளது சிஆர்.சரஸ்வதி பேட்டி

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி 313ஐ உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் அங்கன்வாடிகள் உடனடியாக அரசு ஊழியராக வேண்டும்