in

லட்சுமி நாராயணபெருமாள், சோமேஸ்வரர் கோவிலில் மாசி மக தேர் திருவிழா கொடியேற்றம்

நாமக்கல் சேந்தமங்கலம் லட்சுமி நாராயணபெருமாள், சோமேஸ்வரர் கோவிலில் மாசி மக தேர் திருவிழா கொடியேற்றம்

நாமக்கல் மாவட்டம்சேந்தமங்கலம் லட்சுமி பெருமாள் மற்றும் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவில்களில், நேற்று காலை, மாசி மக திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது. முன்னதாக, உற்சவ ருக்கு அபிஷேகம்,   ஆராதனை நடந்தது.

தொடர்ந்து, பெருமாள் மற்றும் சோமேஸ் வரர் கோவில் வாசலில் அமைந்திருக்கும் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், பெருமாள் கோவில் கொடிமரத்தில் கருட உருவம் வரைந்த கொடியும், சோமேஸ்வரர் கோவில் கொடிமரத்தில் நந்தியம்பெருமான் திருவுருவம் வரையப்பட்ட கொடியும் ஏற்றப் பட்டது.
தொடர்ந்து, 12 நாள் திருவிழாவில், தினமும் இரவு, 8:00 மணிக்கு கேளிக்கை மண்டபத்தில் பெருமாள் மற்றும் சோமேஸ் வரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கிறது.

இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெருமாள் திருக்கல்யாணம், 28லும், சோமேஸ் வரர் திருக்கல்யாணம், மார்ச், 1லும் நடக்கி றது. அதை தொடர்ந்து, இரவு குதிரை வாக னத்தில் சுவாமி எழுந்தருளி வாண வேடிக்கை நடைபெறும்.

மார்ச், 2ல் பெருமாள் திருத்தேரில் எழுந்த ருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தல், 4ல், சோமேஸ்வரர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து நடைபெற உள்ளது. 6ல், இழுத்தல் ஆகியவைநனை திருவிழா நிறைவு டைகிறது.

What do you think?

 கிராம உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம்